வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கர்… அசத்தும் உவரி எழிலன்…

பண்பலை வானொலிகளிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் சூப்பர் சிங்கர் போட்டிகள் . கேட்டிருப்பீர்கள். பார்த்திருப்பீர்கள். ஆனால் வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கர் போட்டிகள் நடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என்னது வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கரா என்று நீங்கள் வாயைப் பிளப்பது தெரிகிறது. ஆமாம் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஒருவர். அவர் உவரி எழிலன்.

  • தற்போது திருச்சியில் வசிக்கும் உவரி எழிலன் திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்தவர். இசைக்கடல் என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஒன்று நடத்துகிறார். வெறும் இசை சம்பந்தமான பதிவுகள் மட்டுமே இந்த குரூப்பில் பகிரலாம். அங்கத்தினர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பாட்டுப்பாடி குரூப்பில் பகிர்ந்து கொள்ளலாம். வேறு பகிர்வுகளுக்கு அனுமதியில்லை. 

  • சூப்பர் சிங்கர் என்ற பெயரில் ஐந்து வாரப் போட்டி ஒன்றை இந்த குரூப்பில் நடத்துகிறார் உவரி எழிலன். வாரா வாரம் குறிப்பிடப்படும் நடிகரின் பாடல்கள் இரண்டை தினமும்  போட்டியாளர்கள் பாடவேண்டும். ஒவ்வொரு வாரமும் பாடுவோரின் திறமைக்கேற்ப நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்குவார்கள். ஐந்தாவது வார முடிவில் குரூப் அங்கத்தினர்களும் போட்டியாளர்களுக்கு வாக்களிக்க, கடைசியில் நடுவர்களின் மதிப்பெண்களும், அங்கத்தினர்களின் வாக்குகளும் சேர்த்து மதிப்பிடப்பட்டு அந்த சீசனின் சூப்பர் சிங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. 

இதுவரை சூப்பர் சிங்கர் சீசன் 1, சீசன் 2 என இரண்டு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்து சூப்பர் சிங்கர் சீசன் 3ஐ நடத்த ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் உவரி எழிலன். அவரிடம் எப்படி உங்களுக்கு வாட்ஸ்அப்பில் சூப்பர் சிங்கர் போட்டி நடத்தும் ஐடியா வந்தது? என்றோம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு பாடல்கள்னா ரொம்ப இஷ்டம்.  சந்திரபாபு ஐயாவின் தீவிரமான ரசிகன் நான். சினிமா பாட்டுகள் மட்டுமில்லை. எல்லா மதத்து ஆன்மீகப் பாடல்களையும் விரும்பிக் கேட்பேன். இசைக்கென்று ஒரு வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்த எனக்கு அதிலேயே சூப்பர் சிங்கர் போட்டிகளை நடத்தினால் என்ன என்று தோன்றியது. இதோ இரண்டு போட்டிகள் முடிந்து விட்டது. அடுத்த போட்டி நடத்த தயாராகிக் கொண்டிருக்கிறேன். இந்தியாவிலிருந்து மட்டுமலல வெளிநாட்டிலிருந்தும்  போட்டியாளர்கள் பாடுகிறார்கள்” என்று சிரித்தார்.
உவரி எழிலனோடு அப்துல் ஜப்பார், சூசை ராயப்பன், ப்ளோரிடா என்று மூன்று நடுவர்கள் இசைக் கடலின் சூப்பர் சிங்கர் போட்டியை வழிநடத்துகிறார்கள். இதற்கு விளம்பரதாரர்களும் உண்டு என்பது அடுத்த ஆச்சரியம். 
வணக்கம் அன்பு நெஞ்சங்களே இது ஆசியாவின் நம்பர் ஒன் பெயிண்ட் நிப்பான் பெயிண்ட்  வழங்கும் இசைக்கடலின் சூப்பர் சிங்கர் சீசன் 2. இந்நிகழ்ச்சியை உங்களுக்கு இணைந்து வழங்குபவர்கள் உங்கள் ஆரோக்கியம் எங்கள் லட்சியம் ஆச்சி மசாலா, உவரி உதயா ஹோட்டல், திசையன்விளை தங்கையா விலாஸ் மிட்டாய்கடை என கணீரென ஒலிக்கின்ற உவரி எழிலனின் குரலைக் கேட்கையில் உவரி எழிலன் பண்பலை வானொலிகளுக்கோ, தொலைக்காட்சி சேனல்களுக்கோ மிகப் பொருத்தமானவர் என்பது தெரிகிறது.

உவரி எழிலனின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவோ, அவரைப் பாராட்டவோ விரும்பினால் அவரது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

கைபேசி எண்: 9790111273

Advertisements

பிற்பகல்

………………

2011ம் ஆண்டைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகை 1,210,193,422. தமிழ்நாட்டின் மக்கள் தொகை

72,147,030. மகாகவி பாரதி இந்தியாவைத் தாயாகப் பாவித்து முப்பது கோடி முகமுடையாள் என்று அப்போதைய இந்தியர்களின் எண்ணிக்கையைப் பாடினான்.
அப்படிக் கணக்கிட்டால் தமிழகத்து மக்கள் தொகையை நான்கில் ஒன்றாகக் குறைக்கும் போது சுமார் ஒண்ணே முக்கால் கோடிக்கும் கொஞ்சம் அதிகமாக வருகிறது. இது பாரதியார் காலத்து எண்ணிக்கையே. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னே மன்னர்கள் காலத்துக்குச் சென்றால் தமிழர்களின் எண்ணிக்கை சில பல லட்சங்களாகத்தான் இருந்திருக்கும். இந்த சில, பல லட்சங்களுக்காக ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், குட்டைகள், கிணறுகள், ஊருணிகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் என தமிழக மன்னர்கள் அமைத்திருந்த நீர்நிலை ஆதாரங்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டும். கோடிகளில் அதிகரித்த மக்கள் தொகைக்கேற்ப நீரின் பயன்பாடு அதிகரிக்கிறதே என நீர்நிலைகளை அதிகரித்தோமா? இல்லை. சரி இருப்பவற்றையாவது பாதுகாத்தோமா? அதுவுமில்லை. 45% நீர் நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டன. வீட்டுமனைகளாக, விளைநிலங்களாக எல்லாத்தையும் மாத்தியாச்சி. இருக்கிற நீர்நிலைகளில் தான் அரசாங்கம் குப்பைகளையும், சாக்கடைகளையும் கொட்டி குப்பை மேலாண்மை செஞ்சிட்டிருக்கு. ஆறுகளில் மணல் அள்ளி, தொழிற்சாலைக் கழிவுகளைக் கொட்டி, ஆலைகளை உறிய விட்டு மரணப்படுக்கையில் தள்ளியாச்சி. சங்கு ஊத வேண்டியதே பாக்கி. இப்படி எல்லாத் தவறுகளும் நம் கண்முன் நடக்கையில் நமக்கென்ன என வேடிக்கைப் பார்த்ததோடு, எவனெல்லாம் இந்த அழிவுகளுக்குக் காரணமோ அந்த நாதாரிகளுக்கே திருப்பித்திருப்பி திருப்பித்திருப்பி வோட்டையும் போட்டு நாட்டை நாசமாக்கி இன்னிக்கு தண்ணியில்லே தண்ணியில்லேன்னு புலம்பினா தண்ணி எங்கேயிருந்து வரும். 
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினையுண்டு. 
இனியேனும் நீர் நிலைகளை மீட்க களமிறங்குவோம்

விடை

ஈழ இனப்படுகொலைகளுக்கு

எப்படி

இந்தியம்

துணை நின்றது?
தமிழக மீனவர்கள்

சிங்களக் கடற்படையால்

சுடப்பட்டு சாகையில்

இந்திய அரசால்

எப்படி

வேடிக்கைப் பார்க்க முடிகிறது?
பிற மாநிலங்கள்

நிராகரித்த அணுவுலையை

எப்படி

தமிழ்நாட்டில்

கூடன்குளத்தில்

நிறுவ முடிந்தது?
தமிழகத்தில் மட்டும் வயல்களின் நெடுகே

எப்படி

எரிவாயுக் குழாய்களை

கெயில் பதிக்க முடிந்தது?
மீத்தேன்

எரிகாற்றுக்காக

காவிரியாற்றுப் படுகைகள்

எப்படி

குறிவைக்கப்பட்டன?
நியூட்ரினோ சுரங்கங்களுக்காக

எப்படி

தேனி

தேர்ந்தெடுக்தப்பட்டது?
ஏறு தழுவுதல்

எப்படி

தடுக்கப்பட்டது?
காவிரி

முல்லைப் பெரியாறு

தமிழ் வழக்காடு மொழி

என

எல்லாவற்றிலும்

எப்படி

தமிழகத்தின் குரலை

மய்ய அரசால்

புறந்தள்ள முடிகிறது?
ஜெயலலிதா எனும்

மாபெரும் ஆளுமையின்

மர்ம மரணத்தையும் கூட

மிகச் சாதாரணமாக

சகித்துக் கொண்டு

கடந்து செல்ல முடிகிற

தமிழர்களின் 

அலட்சியத்திலிருக்கிறது

அதற்கான விடை

# ஜெ.அப்துர்ரஹ்மான்

​புதைக்கப்பட்ட  மர்மங்கள்


74 நாட்கள் தீவிர சிகிச்சையில் அம்மா இருந்துள்ளார். தொண்டையில் துளையிடப்பட்டு சுவாசிக்க கருவி மாட்டப்பட்டிருந்தது என்றார்கள். இத்தனை நாளும் திரவ உணவு தான் கொடுக்கப்பட்டிருக்கும். 74 நாட்கள் இயல்பான உடல் இயக்கம், வழக்கமான திட உணவு இல்லாத ஒரு நோயாளி பெருமளவு உடல் மெலிந்திருப்பார். முகம் ஒடுங்கியிருக்கும். எடை குறைந்திருப்பார். அம்மாவின் முகத்தைப் பார்த்தால்  அப்படியாத் தெரிகிறது. அதற்கான எந்த அறிகுறியும் இல்லை. 
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அம்மாவைப் பார்க்க யாரையும்  அனுமதிக்கவில்லை. இந்தியாவின் மிகவும் செல்வாக்கான நேரு குடும்பத்தின் வாரிசிற்கே கூட அனுமதி மறுக்கப்பட்டது. 
சிகிச்சை குறித்த ஒரு புகைப்படம் கூட இதுவரை வெளியிடப்படவில்லை. பிரான்ஸ் தமிழச்சியின் கூற்றே உண்மையாகப் படுகிறது. அம்மாவின் அப்பல்லோ நாட்களில் மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. உண்மையில் அவரின் இறப்பை அதிகார வர்க்கங்கள் பல திரைமறைவு பேரங்களுக்கு நீண்ட காலம் பயன்படுத்திக் கொண்டதாகவே தெரிகிறது.

தமிழக மக்களுக்காகவே தன் வாழ்வை முழுவதும் அர்ப்பணித்த அம்மாவின் அப்பல்லோ மர்மங்களை உடைத்து உண்மை நிலையை வெளிக்கொணர முன்வராமல் அவர் நேசித்த மக்கள் அதிகார வர்க்கத்தின் பொய்களுக்குள் மு(அ)டங்கியது வரலாற்றுப் பிழை.

அம்மா….

எங்களை மன்னித்து விடுங்கள் தாயே

# ஜெ.அப்துர்ரஹ்மான்

அம்மா

÷÷÷÷÷÷÷÷


பார்த்துப்பார்த்து 

வளர்ததாள் 

இந்தப் 

பாழாய்ப்போனவனை

என் அம்மா

அறுபது வயதிலும்

மழை வெயில் பாராமல்

காடுமேடெல்லாம் 

அலைந்து உழைத்தாள்

இந்த

உதவாக்கரையின்

வயிற்றிற்காக

குரலுயர்த்தி

ஏசியிருக்கிறேன்

மரியாதையற்ற

வார்த்தைகளை 

வீசியிருக்கிறேன்

அதையெல்லாம்

தாங்கிக்கொண்டிருக்கிறாள்
நான் 

உடல்நலம் குன்றி

படுத்தால் மட்டும்

கண்கலங்கி

தடுமாறியிருக்கிறாள்

முப்பத்தெட்டு வயதில்

கணவனை இழந்தவள்

அறுபத்தெட்டுவரை

எங்களுக்காகவே வாழ்ந்தாள்
கடைசிவரை நாங்கள்தான்

அறிய மறந்தோம்

அந்த அப்பாவியின்

மனதை

கந்தலை உடுத்திக்கொண்டு

கலர்கலராய் 

ஆடை வாங்கித்தந்து

அழகுபார்த்திருக்கிறாள்

ஒரு கைக்குட்டைகூட

வாங்கித் தராத

இந்த கையாலாகாதவனுக்காக

திடீரென ஒருநாள்

விபத்தில்

தலையில் அடிபட்டு

நினைவு திரும்பாமலேயே

கண்களை மூடிக்கொண்டாள்
நினைவு திரும்பாத

நிலையிலும்

அவளின்  கண்களில் 

கண்ணீர்

வழிந்துகொண்டுதான்

இருந்தது

என்னை அனாதையாக

விட்டுச்செல்வதையெண்ணி

அழுதாள்போலும்

ஒரு மகனாக

தாய்க்கு செய்யத்தவறிய 

கடமைகளை நினைத்து

குற்ற உணர்வில்

பல இரவுகளில்

தூக்கம்.தொலைக்கிறேன்

கண்ணீர் வடிக்கிறேன்

 

மரணத்தருவாய்

வரையிலும்

குற்றவுணர்வும்

கண்ணீரும்

இந்தக்குற்றவாளியைத்   துரத்தும்

என்னைப்போல

எத்தனைபேரோ?

அம்மா எனும்

அமுதசுரபியை

தவறவிட்டுத் தவிப்பவர்கள்…

# ஜெ.அப்துர்ரஹ்மான்

அய்யன் காளி


கேரளாவில் தாழ்த்தப்பட்ட  சமூகத்திற்கெதிரான நாயர்கள், நம்பூதிரிகளின் சாதிய அடக்குமுறை௧ளை, படையமைத்து பதிலடி கொடுத்து சாதித்த புலையர் குலத்து மாவீரன்,

தாழ்த்தப்பட்ட மக்கள் எங்கெல்லாம் தாக்கப்பட்டார்களோ அங்கெல்லாம் அய்யன்காளியின் படை பதில் தாக்குதல் நடத்தும்.

அம்பேத்காரை அறிந்த, உள்வாங்கிய தலித் (இளைஞர்) சமூகம் அய்யன்காளியை பெருமளவு அறியாமலேயே இருக்கிறது. 

இன்றும் கூட சாதிய அடக்குமுறை அகலவில்லை. அகலப் போவதுமில்லை. அரசு, காவல்துறை, நீதித்துறை இவற்றை நம்பி ஏமாறுவதை விட அய்யன்காளி வழியில் படைகள் அமைத்து எதிர்கொள்வதே அனைத்து அடக்குமுறைகளையும் முடிவுக்கு கொண்டு வரும். 

ஏனென்றால் திருப்பியடித்தலே சிறந்த வைத்தியம்,

இது இஸ்லாமிய சமூகத்திற்கும் சேர்த்தே,

# ஜெ.அப்துர்ரஹ்மான்